Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று (03) உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த இரகசிய பொலிஸார், அவருக்கு எதிராக குற்றவியல் கோவைச் சட்டத்தின் 296ஆம் சரத்தின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த நீதவான், அவரை தங்காலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு, பொலிஸாரை பணித்தார்.
இருப்பினும், தன்னைத் தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வேண்டாம் எனவும் குருவிட்ட விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், சந்தேகநபரான
ஏ.எஸ்.பி.யினால் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவரை குருவிட்டவுக்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி நான்காம் திகதியன்று, எம்பிலிபிட்டியவிலுள்ள வீடொன்றில் உற்சவமொன்று இடம்பெற்றபோது, அங்கு சென்ற பொலிஸாருக்கும் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில், ஒரு குழந்தையின் தந்தையான சுமித் பிரசன்ன ஜயவர்தன (வயது 29) என்பவர், 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இவரது மரணத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி ஏ.எஸ்.பி கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியமை, காயப்படுத்தல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தல், சட்டவிரோதமான முறையில் குழுவாகக் கூடியமை ஆகிய காரணிகளை முன்வைத்தே, மேற்படி சந்தேகநபரை கைது செய்ததாக இரகசியப்
பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம், நேற்று மாலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
19 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
35 minute ago
39 minute ago