2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

டிகிரா எரித்துக் கொலை: மூவர் கைது

Janu   / 2025 மே 04 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை எரித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடைய இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இரண்டு கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட நபர் ரத்மலானை மஹிந்தராம வீதியை சேர்ந்த டிகிரா என அழைக்கப்படும் 23 வயதுடைய கவிந்த கயாஷான் ரணவக்க ஆவார்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் 'மொரட்டுவ பாதாள உலகம்' என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிட்டதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X