2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Editorial   / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, மூணமலேவத்த கைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின் சடலம் இன்று (31) கண்டெடுக்கப்பட்டதாக கொஸ்கம காவல்துறை தெரிவித்துள்ளது.

இறந்தவர் படுக்க, மின்விசுதுருகம, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதான மொரடேகேஜ் நந்தகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியரான இவர்,  ஹன்வெல்லவில் உள்ள இலுகோவிட்ட கல்லூரியில் கற்பித்து வருகிறார், மேலும் அவர் வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்தார் என்று பொலிஸார்  தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உடல் தீப்பிடித்ததா?, மின் கசிவால் தீ ஏற்பட்டதா? அல்லது தீப்பிடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொஸ்கம காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X