J.A. George / 2022 ஜனவரி 25 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்துக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்காவிடின் ரயில் சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரயில் திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் வரையான எரிபொருள் இருப்பு உள்ள போதிலும், அது தற்போது மூன்றரை இலட்சம் லீற்றர் ஆக குறைந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே தெரிவித்துள்ளார்.
ரயில்கள் முறையான இயங்கினால் நாளொன்றுக்கு 100,000 லிட்டர் எரிபொருளை செலவழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருதானை ரயில் ஊழியர் சங்க காரியாலயத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
43 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago