2026 ஜனவரி 24, சனிக்கிழமை

எரிவாயு மின்தகனமேடைகளை கோருகிறது கூட்டமைப்பு

Nirosh   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, உடனடியாக எரிவாயு மின்தகனமேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பாராளுமன்றத்தின் இன்றைய(07) விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின்தகனமேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை. இதனால் வடக்கு கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தார்.
 
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின்தகன மேடைகள் உள்ளன. மட்டக்களப்பில் இல்லை.
 
எனவே நிதி அமைச்சர் உடனடியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின்தகனமேடைகளை அமைத்து கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X