Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருட்களின் சில்லறை விலைக்கான விலைப் பொறிமுறையை 2016 இன் முதற் காலாண்டில் கொண்டுவரவுள்ளதாக, பெற்றோலியதுறை அமைச்சர் சந்திம வீரக்ககொடி, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாதென அவர் உறுதியளித்தார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெருமளவு கடனை வசூலித்ததாக அமைச்சர் கூறினார்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வரையில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் 22.1 பில்லியன் ரூபாய், மிஹின் லங்கா 1.4 பில்லியன் ரூபாய், ரயில்வே திணைக்களம் 1.1 பில்லியன் ரூபாய், இலங்கை இராணுவம் 806 மில்லின் ரூபாய், கடற்படை 429 மில்லியன் ரூபாய், பொலிஸ் 62.78 மில்லியன் ரூபாயையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து கடனாகப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
நிறுவனங்களின் மொத்தக்கடன் 477 பில்லியன் ரூபாயாகும். இதை இவ்வருட முடிவில் 277 பில்லியனாக குறைப்போம் என அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .