Freelancer / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்பை இன்று பிற்பகல் வெளியிடும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டை முடக்குதல் அல்லது நாடளாவிய பயணக் கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
7 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago
5 hours ago