Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
படகில் கடற்தொழிக்குச் சென்ற மீனவர், எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றின் அனுமதியுடன் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று(19) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அச்சுவேலி வளலாயைச் சேர்ந்த செல்வரத்தினம் செல்வதாஸ் (வயது 35) என்பவரே இவ்வாறு தடமாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளார்.
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்த்து PCR பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
அவர் நேற்று இரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago