Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 27 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க நேர்மறையான செயல்திறனையும் நிலையான முன்னேற்றத்தையும் காட்டி வருவதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கூறுகிறார்.
ஊடகங்களுக்கு சனிக்கிழமை (26) அன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மங்கள விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.
கடந்த 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7.14% வளர்ச்சியாகும் என்று அவர் மேலும் கூறினார்.
“மே 2025 இல் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,386.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது மே 2024 உடன் ஒப்பிடும்போது 6.35% வருடாந்திர வளர்ச்சியாகும்.
இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் செயல்திறன் நிலை மற்றும் சந்தைகளை பன்முகப்படுத்தவும் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
2025 மே மாத்த்தில் மட்டும், சரக்கு ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 1.70% அதிகரித்து 1,028.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.
இலங்கை சுங்கத்தின் தற்காலிக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் ரத்தினங்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் மதிப்பிடப்பட்ட வருவாயும் அடங்கும்.
2025 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் சரக்கு ஏற்றுமதி 5,344.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.46% அதிகமாகும்.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago