2025 ஜூலை 28, திங்கட்கிழமை

திருமணம் செய்யாமலே கர்ப்பமான நடிகை

Editorial   / 2025 ஜூலை 28 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

கன்னட சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் பாவனா ராமண்ணா. தமிழில் அன்புள்ள காதலுக்கு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 40 வயதான பாவனா இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 40 வயதை நெருங்கியபோது, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவு சாதாரணமாக நடக்கவில்லை. செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாத பெண் என்ற ஒரே காரணத்தை சொல்லி அனைவரும் என்னை நிராகரித்தனர். எனது விருப்பத்துக்கு தடை போட்டனர். தற்போது தடைகளை தாண்டி இரட்டை குழந்தைகளுக்கு அம்மா ஆகப்போகிறேன். என்கிறார் பாவனா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .