2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

“750 ஊசிக்கு மேல போட்டாச்சு”: பொன்னம்பலம் கண்ணீர்

Editorial   / 2025 ஜூலை 27 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், ‘நாட்டாமை’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களிலும் நடித்து வந்துள்ள இவர், கடந்த காலங்களில் உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பொருளாதார சிக்கலால் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், வீடியோ மூலம் பொதுமக்களிடம் உதவி கேட்டதையடுத்து, பலரும் உதவிக்கு முன்வந்தனர்.

IFrameசமீபத்தில் Galatta Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பொன்னம்பலம், “முதலில் எனக்கு உதவியவர் சரத்குமார். அவரின் பரிந்துரையால் கே.எஸ். ரவிக்குமார், தனுஷ், அர்ஜூன், சிரஞ்சீவி உள்ளிட்டோர் மனதார உதவி செய்தார்கள். பல நல்ல உள்ளங்களின்  உதவியால் தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்தார். மேலும், “சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக நான்கு வருடங்கள் தொடர்ந்து டயாலிசிஸ் செய்தேன். வாரம் மூன்று முறை, இரண்டு ஊசிகள் உடம்பில் போடப்பட்டு, ரத்தம் வடிகட்டப்பட்டது. இது வரை சுமார் 750 ஊசிக்கு மேல் போடப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனுக்கான மிகப்பெரிய தண்டனை. என் எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக்கூடாது” எனத் தவிப்புடன் கூறினார்.

IFrameமேலும், “நான் மது குடித்ததால்தான் இந்த நிலை வந்ததென சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதல். என் உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தபோது, என் உயிரை காப்பாற்ற சிரஞ்சீவி சார் கோடி கணக்கில் உதவி செய்தார். அவர் இல்லையெனில் இன்று நான் இருக்க மாட்டேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் சிரஞ்சீவிதான்” என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

IFrameIFrameஇப்போது ஓரளவுக்கு உடல் நலமுடன் இருக்கும் பொன்னம்பலம், “என் வாழ்க்கையின் முதல் பாதியில் என் அக்கா தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள் என எல்லாம் கிடைத்தது. தற்போது நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஒரு உதவியாளர் மட்டும்தான் என்னுடன் இருக்கிறார். எனக்கு உயிர் கொடுத்து உதவிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்று தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X