2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நாக்கை அடக்க முடியாத நித்யா மேனன்

Editorial   / 2025 ஜூலை 24 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண்டிராஜ் இயக்கத்தில் முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் ஜோடியாக நடித்திருக்கும் தலைவன் தலைவி படம் வெள்ளிக்கிழமை (25)  ரிலீஸாகவிருக்கிறது. பாண்டிராஜுக்கு என தனி குடும்ப ஆடியன்ஸ் உண்டு.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருப்பதால் தலைவன் தலைவி படத்தை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்த படத்தில் ஆகாசவீரனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டர். படப்பிடிப்பை மதுரையில் நடத்தியபோது அங்கு கிடைத்த பரோட்டாவை சாப்பிட்டு என்ஜாய் செய்திருக்கிறார் நித்யா மேனன்.

மதுரையில் கிடைக்கும் பரோட்டாவின் ருசி பிடித்துப் போகவே மனசும், வயிறும் நிறையும் வரை நிறைய சாப்பிட்டிருக்கிறார். படத்தில் நித்யா மேனன் பரோட்டா சாப்பிடும் காட்சி இருக்கிறது. அதனால் கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் கூட பரோட்டாவாக சாப்பிட்டிருக்கிறார் அவர். இதை நித்யா மேனனே தெரிவித்துள்ளார்.

மதுரை என்றாலே பரோட்டா சால்னாவை தவிர்க்க முடியாது. அப்படி இருக்கும்போது மதுரையில் நித்யா மேனன் நாக்கை அடக்க முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டதில் ஆச்சரியம் இல்லை. நித்யா மேனன் சொன்னதை கேட்ட மதுரைக்காரர்கள் கூறியிருப்பதாவது,

எங்க ஊரு பரோட்டா சால்னா யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். நித்யா மேனன் எங்க ஊர் ஸ்பெஷலை ரசித்து சாப்பிட்டதில் சந்தோஷம். பரோட்டா சால்னா ஓகே ஆனால் ஜிகர்தண்டா குடிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X