2025 ஜூலை 26, சனிக்கிழமை

“ஒன்னுதான்டா செத்துருச்சு.. இன்னொன்னை கழுத்தை பிடிச்சி நெரிச்சிட்டேன்’’

Freelancer   / 2025 ஜூலை 25 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்போது தண்டனை பெற்றுள்ள குன்றத்தூர் அபிராமி, சுந்தரம் வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் Voice of TamilNadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்,

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2017 காலகட்டத்தில், இன்றைய ரீல்ஸ், டிக்டாக் போல, மியூசிக்கலி என்ற ஆப் ஒன்று அப்போது இருந்தது.. அந்த மியூசிக்கலி ஆப்பில் ஃபேமஸாக இருந்தார் அபிராமி.. கொழுக் மொழுக் உருவம், மாட்டு முழியுடன் இருந்தார்.. இதுபோன்றவர்களை உருவ கேலி செய்வதும் தவறு கிடையாது.

 7 வயதில் அஜய் , 4 வயதில் கார்ணிகா என்ற பெண் குழந்தை இருந்தனர்.. கணவர் விஜய், ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலையை செய்து கொண்டிருந்தார். தினமும் மேக்கப் செய்வது, டிக்டாக் வீடியோ போடுவது, பைக் எடுத்துட்டு போய் பிரியாணி வாங்கிட்டு வருவது என்று வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்.. பிரியாணி வாங்கும்போது சுந்தரம் நெருக்கமாகி உள்ளார்.. 

2 குழந்தைகளுடன் குன்றத்தூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே அபிராமியின் பெற்றோரும் ஒருஅப்பார்ட்மென்ட்டில் குடியிருந்துள்ளனர்.. சுந்தரத்துடன் நெருக்கம் அதிகமாகிவிடவும், திடீரென 5 நாள் வீட்டை விட்டு வெளியே சென்று, சுந்தரத்துடன் ஜாலியாக இருந்துள்ளார் அபிராமி.

அடங்காத அபிராமி 

பிறகு, 2 குழந்தைகள், கணவன் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசி அபிராமியை வீட்டுக்கு குடும்பத்தினரே அழைத்து வந்துள்ளனர்.. ஆனாலும், அபிராமியின் காமம் அடங்கவில்லை.. புருஷனும், பிள்ளைகளும் இருக்கும்வரை நிம்மதியாகவே வாழ முடியாது என்ற முடிவுக்கு கள்ளக்காதல் ஜோடி வந்தது. 

இதில், அவர்களை கொலை செய்ய ஐடியா தந்தது சுந்தரம்தான் .. 2 வகையான மாத்திரைகளை வாங்கி அபிராமியிடம் தந்துள்ளார்.. ஒன்று, மென்சோவிட்டப் பிளஸ்.. இது வயிற்றில் கரு நிற்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரையாகும்.. இன்னொன்று தூக்க மாத்திரையாகும். .இரண்டையுமே பாலில் கலந்து தந்துள்ளார் அபிராமி.. 

ஒரு குழந்தை அதில் இறந்துவிட்டது.. இன்னொரு குழந்தை இறக்கவில்லை என்பதால், அதன் தொண்டையை பிடித்து நெரித்து, குழந்தையின் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து, குழந்தையின் தொண்டையை மிதித்தே கொன்றுவிட்டார் அபிராமி.

தப்பித்த சுந்தரம் 

உடனே சுந்தரத்துக்கு போனை போட்டு ,"ஒன்னுதான்டா செத்துருச்சு.. இன்னொன்னை கழுத்தை பிடிச்சி நெரிச்சிட்டேன்" என்று அபிராமி சொன்னார்.. அதற்கு சுந்தரம், "நெரிச்சிட்டியா, செத்துருச்சா, சரி, விஜய்யையும் கொன்னுரு என்கிறார்.. இதெல்லாம் ஆடியோவாக அன்று வெளிவந்தது.. 

ஆனால், அன்றைய தினம்பார்த்து விஜய்க்கு ஆபீசில் வேலை அதிகமாக இருந்துள்ளது.. ஆடிட்டிங் போயிருக்கு.. அதனால் அன்றைய தினம் அங்கேயே தூங்கிவிட்டார்.. எனவே காலையில் வரவில்லை.. இதனால் அபிராமியின் திட்டம் தடைபடுகிறது.. உடனே சுந்தரம், நீ முதலில் வெளியே வந்துவிடு என்று சொல்லியிருக்கிறார்.. அதற்கு பிறகே அபிராமி, ரொம்ப கூலாக, வீட்டிலிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு, கோயம்பேடு சென்று, அங்கிருந்து நாகர்கோவில் பஸ் ஏறிவிட்டார்.. 

சம்பவ இடத்துக்கு சென்றேன் மறுநாள் காலையில்தான் விஜய் வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், வீடு சாத்தப்பட்டிருந்தது.. ஒருவேளை அபிராமி பக்கத்திலுள்ள அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என்று நினைத்து, அங்கே சென்று கேட்டதற்கு அபிராமி வரவேயில்லை என்று கூறியிருக்கிறார்கள். 

பிறகுதான் மறுபடியும் வீட்டிற்குள்ளேயே நுழைந்து பார்த்தபோது 2 குழந்தைகளும் சடலமாக கிடக்கிறார்கள்.. பக்கத்துலயே ஸ்கூல் பை கிடந்தது.. குன்றத்தூர் இன்ஸ்பெக்டராக சார்லஸ் இருந்தார்.. அப்போது நான் சம்பவ இடத்தை நேரில் பார்த்தேன்.. கோயம்பேட்டில் சிசிடிவி ஆராயப்பட்டபோது, முகத்தில் ஸ்கார்ஃப் கட்டி, ஒரு உருவம் சென்றது பதிவாகியிருந்தது.. அபிராமியின் கண்கள்தான் அடையாளப்படுத்தியிருக்கிறது.. உடனே சுந்தரத்தை போலீஸ் கைது செய்து விசாரித்தபோதுதான், நாகர்கோவிலுக்கு சென்றது தெரியவந்தது.. 

குற்ற உணர்ச்சியில்லை 

சுந்தரத்தை வைத்தே அபிராமிக்கு போலீஸ் போன் போட வைத்தது. டேய், நான் நாகர்கோவில் வந்துட்டேன்டா, நீயும் வந்துடு" என்று கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொன்னார் அபிராமி. முதல் குற்றவாளி அபிராமி, 2ம் குற்றவாளி சுந்தரம் என பதிவானது.. காஞ்சிபுரம் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்தது.. 

கடந்த 2018ல் சிறைக்கு சென்றதிலிருந்தே, அவர்கள் இருவருமே ஜாமீனில் வெளிவரவேயில்லை. ஒருமுறை, அபிராமி கைதானதுமே, அவரது அம்மாவை சென்று வீட்டில் சந்தித்தேன்.. குழந்தைகள் போட்டோவுக்கு கீழே டம்ளரில் பால், பிஸ்கட் வைத்திருந்தார்கள்.. 16 நாள் விளக்கேற்றி வைத்திருந்தனர்.. "குழந்தைகளை எங்க கிட்ட தந்திருந்தாலாவது நாங்கள் வளர்த்திருப்போமே" என்று அழுதார். 

ஓவென ஒப்பாரி வைத்த அபிராமி 

ஒருமுறை அபிராமியை சிறையில் சந்தித்தேன்.. "2 குழந்தைகளை கொன்றதற்கு உன்பக்கம் உள்ள நியாயமான ஒரு காரணத்தை சொல், உனக்காக வழக்கில் நான் ஆஜராகிறேன்.. ஒரு சதவீதம் உன்னிடம் நியாயம் இருந்தாலும், எப்பாடுபட்டாவது சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவேன் என்றேன்.. 

அதற்கு ஓ என்று ஒப்பாரிதான் வைத்தார் அபிராமி.. யார் குழந்தைகளாக இருந்தாலும்சரி, சொந்த காம உணர்ச்சிக்காக குழந்தைகளை பலியிட்டது தவறு.. வல்லுறவு, பாலியல் இச்சைக்கு எதிரான போராட்டத்தை இங்கு நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்" என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X