2025 ஜூலை 26, சனிக்கிழமை

செம்மணி புதைகுழியின் தற்போதைய நிலை

Freelancer   / 2025 ஜூலை 25 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று  மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மேலும் 2 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், 05 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில், மொத்தம் 25 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் 16 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 05 எலும்புக்கூடு தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தம் 81 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடு தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட முறைமை, மற்றும் பிரேத பெட்டியில் வைக்கப்பட்டிருந்தமை ஆகியவை இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இதனால், இவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவை மீண்டும் மண்ணால் மூடப்பட்டன.

மேலும், மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவ்விடங்களில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் அப்பகுதிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X