2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஏ - 9 வீதியில் காயங்களுடன் சடலம்

Editorial   / 2024 ஜூலை 23 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி -யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் கடுங்காயங்களுடன் ஆண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திரப்பனை பொலிஸ் டொமைன் கல்குளம் கி.மீ.  122,க்கும் 123க்கும் இடைப்பட்ட வீதியில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் திங்கட்கிழமை (23) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திரப்பன பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம், மிஹிந்தலை, கெதேவ பிரதேசத்தைச் சேர்ந்த முதியன்சேலா சுரவீர என்பவர் என்றும் 38 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வீதியில் பயணித்த வாகனத்தில் ஏறி பயணித்தபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வீதியில் பயணித்த வாகனத்துடன் மோதி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X