2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஐந்து பாடசாலைகளுக்கு பூட்டு (UPDATE)

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பிரதேசத்திலுள்ள 5பாடசாலைகள்  ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நகரத்தில் உள்ள குப்பை மலைகள் இரண்டு, நேற்று முழுவதும் தீப்பற்றி எரிந்தமையால் நகரம் முழுவதும் புகையால் சூழ்ந்துள்ளது. அதனையடுத்து, இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பதுளை விஹாரமகா தேவி பெண்கள் பாடசாலை, தர்மதூத மகா வித்தியாலயம்,  ஊவா மகா வித்தியலாயம், அல்அதான் வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (17) கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .