Freelancer / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ ஆகியோருக்கிடையில் நேற்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. (a)

25 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
50 minute ago