Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 மே 01 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வைத்திருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது,
முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளைக் குறைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி இந்த வசதிகள் அகற்றப்பட்டுள்ளன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
15 May 2025