R.Maheshwary / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வாரத்துக்கு முன்னர், பொலன்னறுவை- கல்லெல்ல சிசிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற கைதிகள் ஐவருள் மற்றொருவர் இன்று (6) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர், 52 வயதான வாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கொள்ளை சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தப்பிச் சென்றவருக்கு அடைக்கலம் வழங்கிய பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்ற ஐவருள் முதலாவது சந்தேகநபர் மாதம்பே பிரதேத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026