Editorial / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ. எல் ஜவ்பர்கான்
ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ். நந்தன தெரிவித்தார்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை ,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2,520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது .
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026