Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யொஹான் பெரேரா
ஐ.எஸ்.ஐ.எஸ்- இன் தீய செயல்களினால் மத்திய கிழக்கில் அடுத்த வருடம் நெருக்கடி நிலை தோன்;றும் நிலைமை ஏற்படின் அதனை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன்; ஒரு விஷேட ஏற்பாட்டை செய்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை( 01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
'2016 இல் ஐ.எஸ்.ஐ.எஸ் உண்டாக்கியுள்ள மோதல் மோசமடையுமாயின், மத்திய கிழக்கில் தோன்றக் கூடிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருப்பது இலங்கைகு நல்லது' என வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் போது பிரதமர் கூறினார்.
பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி தடைப்படுமென எதிர்பார்க்கும் நிலைமையில், 2016ஆம் ஆண்டு, பூகோள அளவில் நிச்சயமான தன்மையைத் தோற்றுவிக்கும் என அவர் கூறினார்.
2036இல் இலங்கையை உயர்வருமானமீட்டும் நாடாக மாற்றுவதற்காக, சகல அரசியற் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைய வேண்டுமெனவும் அவர் கூறினார்.
'இந்த இலக்கை நாம் அடையாதுவிடில், எமது வரும் சந்;ததிகளுக்கு நாம் தீங்கிழைத்தவர்கள் ஆவோம்' என அவர் குறிப்பிட்டார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இணைத்து, அதன் நிர்வாகத்தை புதிய அமைப்பொன்றிடம் வழங்குவதற்கான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் தெரிவித்தார். அவை இரண்டும் இணைக்கப்படாது என்பதை மீளவும் வலியுறுத்திய அவர், முன்னர் இருந்ததைத் போலவே மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படுமெனக் குறிப்பிட்டார்.
எனினும், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு அதிகளவிலான சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு, ஏனைய பல நாடுகளில் காணப்படுவதைப் போன்று, புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, தகவலறியும் சட்டமூலம், நாடாளுமன்றத்தை அரசியலமைச் சபையாக்குவதற்கான பிரேரணை ஆகியன, அடுத்தாண்டு ஆரம்பத்தில் கொண்டுவரப்படுமெனத் தெரிவித்த பிரதமர், கணக்காய்வுச் சட்டமூலமும் விரைவில் கொண்டுவரப்படுமெனக் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் முன் பகுதியில் தகவல்களை உரிமை, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றல் என்பதற்கான சட்ட மூலத்தை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025