Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 23 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அதிகாரங்களை மக்களிடம் ஒப்படைத்துவிட்டு ஐ.தே.க அரசாங்கம் விலக வேண்டுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, புதிய அரசாங்கம் ஒன்றினாலேயே, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன, மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய அரசமைப்பு ஆபத்தானது என்பதை, நாட்டு மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக இந்த வருடம், பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் இந்த வருடம், 4.5 மில்லியன் டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும், மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த அரசாங்கத்தால், கிராம எழுச்சித் திட்டத்தை செய்ய முடியாது. சமூர்த்தி நிவாரணங்களை வழங்க முடியாது. ஆனால், இவற்றை எல்லாம் செய்வதாக அரசாங்கம் பொய்யுரைக்கிறது எனவும் குற்றஞ்சுமத்தினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்துக்கு திட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தது. ஆனால், துறைமுக நகரம் நல்லதொரு வியாபாரத் திட்டம் என்பதை அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago