2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.தே.க வை பிளவுபடுத்த இடமளியோம்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் அதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என,  ஐக்கிய தேசியக்  கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர் அஜித் பீ.பெ​ரேரா தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று (27), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எத்தகைய பிளவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்​றே ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்து, எம்மை பலவீனப்படுத்த முயல்கிறார் என்றார்.

அத்துடன், தற்போது நாடாளுமன்றத்தில் 123 பேரின் ஆதரவு தமது கட்சிக்கு உள்ளதாகவும் அஜித் பீ.பெ​ரேரா மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .