2025 மே 22, வியாழக்கிழமை

ஐ.நா தீர்மானத்துக்கமைய புதிய சட்டம்

Thipaan   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு, இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, அச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அரசாங்கம் வரைந்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்ததாக சந்தேதிக்கப்பட்ட நபர்களுகள் நடவடிக்கை எடுப்பதற்காக, இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

புதிய சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறிய அவர், அதை எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என தன்னால் கூற முடியாது என கூறினார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பில், அரசாங்கத்தில் பேதம் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் நிராகரித்தார்.

முதலில், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது. இச்சட்டத்தை நீக்குவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இச்சட்டத்தை நீக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்ததுடன், விமர்சகர்கள் இதனையொரு சர்வாதிகாரச் சட்டம் எனக் கூறியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X