Freelancer / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒட்சிசன் இல்லாமல் எந்தவொரு நோயாளியும் தமது உயிரை விடுவதற்கு இடங்கொடுக்க மாட்டோம் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டின் தினசரி ஒட்சிசன் தேவை அதிகரித்திருந்தாலும், அந்த ஒட்சிசன் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முதன்மை கவனம் செலுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை-ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பிரதிநிதிகளுடன் சூம் தொழில்நுட்பம் ஊடாக நடந்த கலந்துரையாடலிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஒட்சிசனை வழங்குவதில் இலங்கையில் ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது என்றும் நிறுவனத்தின் முழு ஆதரவும் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago