2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஒன்று அல்லது இரண்டு போதுமானது

Lenin Raj   / 2026 மார்ச் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் இக்கட்டான நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஒன்று அல்லது இரண்டு மின்விளக்குகளை மாத்திரம் ஒளிரவிடுமாறு இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இரவு நேரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, கச்சா எண்ணெய்க்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்பார்க்கப்பட்ட இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் இதுவரை வருகை தரவில்லை. இதன் காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்தை அடுத்த மாதம் நடுப்பகுதி வரை மாத்திரமே இயக்க முடியும்.

ஆகையால், பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதே சிறந்ததாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .