2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தவறை ஏற்றுக்கொள்கிறது

George   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால், நீதிமன்றத்துக்கு செல்ல முடியாமல் போனமை தொடர்பில் நாட்டின் சகல மக்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இன்று அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தவற்றை சரி செய்வதற்காக குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதாகவும் எனினும் போதிய கால அவகாசம் இல்லாததால் அதனை கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு உச்சநீதிமன்றத்தின் ஊடாக சவால் விடுக்காதமை தம்முறை தவறு என ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .