Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர், வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.
“வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள்? டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்? இவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல் . அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்ற்றன
இவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? என அனுர கேள்வி எழுப்பியுள்ளார். (R)
10 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago