2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், தம்புள்ளை வீதியில் ​தோரயாய பிரதேசத்தில், இன்று (02) காலை 6.30 மணியளவில், ஓட்டோ மற்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணஞ்செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகன் ஆகிய மூவருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த காரானது, பஸ் ஒன்றை முந்திச் செல்லமுற்பட்ட வேளையில், குறித்த ஓட்டோவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை  கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .