2026 மே 09, சனிக்கிழமை

dd

’ஒற்றை, இரட்டை அவசியமில்லை’

Niroshini   / 2021 மே 18 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய பணியிடங்களுக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், தேசிய அடையாள அட்டையின் ஒற்றை, இரட்டை இலக்க நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று, இராணுவத் தளபதியும் கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊழியர்களை நிறுவனங்களுக்கு அழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல் முறைமையொன்றை, ஒவ்வொரு நிறுவனமும் கடைபிடித்து வருவதால், அந்த வகையில், 25 சதவீதமான ஊழியர்களே நிறுவனங்களுக்கு அழைக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டையின் ஒற்றை, இரட்டை இலக்க நடைமுறையானது, தனிப்பட்ட அத்தியாவசியக் காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கே உரித்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .