2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஒழுக்க விதிகள் மீறல்: ஆய்வுக்கு சு.க தயார்

Gavitha   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கத்தவர்கள், கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினார்களா இல்லையா? என்பது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளதாக, அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், உள்ளூராட்சி சபையின் அங்கத்தவர்கள் சிலர், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தனர். இடைநிறுத்தப்பட்டுள்ளமையை அறிவிக்கும் முகமாக, கட்சியின் பொதுச் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தை, எரித்தும் கிழித்தெரிந்தும், கட்சியின் விதிமுறைகளை மீறும் படியாகவும் நடந்துக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, உள்ளூராட்சி சபையின் சுமார் 1,407 உறுப்பினர்கள்,  கட்சியின் தலைமையையும் மீறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாக நீர்கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 95 சதவீதமானவர்கள் தன் பக்கம் இருப்பதால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .