Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 31 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டோக்களின் அதிகரிப்பால் ஓட்டோ சாரதிகளின் வாடகைப் போக்குவரத்து குறைந்துள்ளதாகவும், இதனால் ஓட்டோ சாரதிகளின் கடமை நேர அளவு 2 மணித்தியாலங்களால் குறைவடைந்துள்ளதாக தேசிய பயிலுநர் மற்றும் தொழிற்றுறைப் பயிற்சி அதிகாரசபையின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நாளொன்றுக்கு 8 மணிநேரம் போக்குவரத்துக்காக நேரத்தை ஒதுக்கும் ஓட்டோ சாரதிகளுக்கு, தற்போது 2 மணித்தியாலங்களுக்கு குறைந்த நேர அளவே வாடகைப் போக்குவரத்து செய்யக் கிடைப்பதாக அந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய மிகுதி 6 மணித்தியாலங்கள் ஓட்டோ சாரிதகள் வாடகைப் போக்குவரத்துக்காக காத்துக்கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையில் 11,39,524 ஓட்டோ வண்டிகள் வாடகைப் பயணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஓட்டேமா சாரதிகளாக 35,36 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகம் காணப்படுவதாகவும் இலங்கை தொழிற்பிரிவில் 9 பேரில் ஒருவர் ஓட்டோ சாரதியாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago