2021 மே 17, திங்கட்கிழமை

ஓட்டோ திருட்டு தொடர்பில் நான்கு முறைப்பாடுகள்

J.A. George   / 2021 மார்ச் 08 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில்  நேற்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட, எஹலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நகரங்களை அண்மித்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும்போது அதிக அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .