2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஓமந்தை விபத்தில் இருவர் பலி

Editorial   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா ஓமந்தை பகுதியில் புதன்கிழமை(18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளனர்.

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த சங்கீதன் (வயது 40) முல்லைத்தீவு பகுதியைசேர்ந்த யோகராசா (வயது 42)  ஆகியோரே சாவடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X