Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, கடற்றொழில் துறையில் துரித அபிவிருத்தியை எட்டுவற்கு, தொழில் தொடர்பான நம்பிக்கையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இடைநிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு தொடர்ந்தும் பயனாளிகளை உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல், ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில், நேற்று (29) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின்போது, மீண்டும் ஓய்வூதியத்துக்கு கடற்றொழிலாளர்களை உள்வாங்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில், சாதக பாதக விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
1990 ஆண்டு அமுல்படுத்தப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் ஊடாக, சுமார் 69,000 பயனாளிகள் உள்வாங்கப்பட்டபோதும் நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக பயனாளிகளை உள்வாங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தற்போது சுமார் 4,860 கடற்றொழிலாளர்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுவருகின்ற நிலையில், தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்றவகையில் ஓய்வூதியத் திட்டத்தை மீளமைத்து தொடர்ந்து பயனாளிகளை உள்வாங்குதவற்கு, அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
44 minute ago
56 minute ago