Janu / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியுடைய "கோக்கைன்" போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான 25 வயதுடைய மலேசிய பிரஜை நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை எனவும் அவர் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு எடிஹட் ஏர்வேஸ் EY-396 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. .
குறித்த நபரின் பையை சோதனையிட்ட போது சொக்கலேட் டின்களுக்குள் குளிசைகள் போல் தயாரிக்கப்பட்ட 5 கிலோகிராம் கோக்கைன், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரும் அவர் கொண்டு வந்த கோக்கைனும், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி.கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .