Nirosh / 2021 ஜூன் 10 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுபிட்டியிலுள்ள சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகப் அப்பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இவர்கள் அனைவரும் வீடுகளிலேயே 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
சொகுசு குடியிருப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டமைக்காக இரு வெளிநாட்டவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பத்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் வெளியாட்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago