Editorial / 2026 மே 08 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மகளிர் 'ஏ' அணியுடன் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து மகளிர் 'ஏ' கிரிக்கெட் அணி இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ-468 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 12.48 மணியளவில் குறித்த அணியினர் நாட்டை வந்தடைந்தனர்.
இந்த அணியில் வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது நியூசிலாந்து மகளிர் அணி 03 ஒருநாள் போட்டிகளிலும் 03 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.
இந்த அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
போட்டி நடைபெறும் தினங்கள்
முதலாவது போட்டி – மே 12
இரண்டாவது போட்டி – மே 15
மூன்றாவது போட்டி – மே 18
இருபதுக்கு 20 தொடர்:
முதலாவது போட்டி – மே 21
இரண்டாவது போட்டி – மே 23
மூன்றாவது போட்டி – மே 25
இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் இளம் வீராங்கனைகளுக்குச் சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


12 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago
2 hours ago