2024 மே 18, சனிக்கிழமை

கட்டிலுக்கு தவழ்ந்த கான்ஸ்டபிள் நீக்கம்

Editorial   / 2024 மே 14 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கரையோர பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்கும் விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடி படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான பணிப்புரையை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தர  விடுத்துள்ளார்.

மாங்குளம்  முகாமில் கடமையாற்றும், கொழும்பு, கரையோர பொலிஸ் பிரிவில், குற்றவியல் நடவடிக்கை தொடர்பிலான பணிக்கு முன்னெடுப்பதற்காக, இணைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிளே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .