2025 நவம்பர் 01, சனிக்கிழமை

கடந்த ஆண்டில் அதிகளவான வரி வருமானம்

Freelancer   / 2025 ஜனவரி 04 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் 1.56 ரில்லியன் ரூபா வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
 
இது 2024 ஆம் ஆண்டில் 1.95 ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
 
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் வருமான வரியாக 112.1 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் வற் வரியினுடாக 245.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X