2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

கோடாரி தாக்குதலில் உயர்தர மாணவி பலி

Janu   / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே  கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கடந்த 17ஆம் திகதி பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அவரது தலையில் தாக்கி பாரிய காயங்களை ஏற்படுத்தியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கோடாரித் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (04)  அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரகதி அபேசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில், புலஸ்திகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.ஐ. ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X