Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 03 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் தான் கலந்துகொண்டபோது, அவர்கள் வழங்கிய சாப்பாடு மிகவும் அருமையாக இருந்ததென்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் அழைப்பின் பேரில், சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு, திருகோணமலை கடற்படை முகாமில் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கலந்துகொண்டிருந்தார்.
இதில், கிழக்கு மாகாண முதலரைமச்சரும் கலந்துகொண்டிருந்ததாகவும், இதன்போது கடற்படையினர் தன்னை அன்பாக வரவேற்று விருந்தளித்ததாகவும் கிழக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படையின் உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர், தகாத முறையில் ஏசியிருந்த விவகாரம், பெரும் பூதாகரமாகிய நிலையில், எந்தவொரு படை முகாம்களுக்குள்ளும் கிழக்கு முதல்வரை அனுமதிக்கப்போவில்லை என்ற தீர்மானம் எட்டப்பட்டிருந்து, பின்னர் அது தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago