2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கடவுச்சீட்டு விவகாரம்: மூவருக்கும் பிணை

Editorial   / 2025 ஜூன் 06 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் தலைமறைவாகியிருக்கும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல் பத்ரா பத்மேவுக்கு கடவுச்சீட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் இரண்டு புகைப்படக் கலைஞர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, வௌ்ளிக்கிழமை  (06) உத்தரவிட்டார்.

ஒவ்வொரு சந்தேக நபருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளை விதித்த பிரதான நீதவான், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்தார்.

புகைப்படக் கலைஞர்களான சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் 13 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .