2026 மே 06, புதன்கிழமை

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு

Freelancer   / 2024 நவம்பர் 04 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்தமுறை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும் இந்த மாதத்திற்கான திகதி ஒதுக்கீடுகள் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .