2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கடும் மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

Freelancer   / 2021 நவம்பர் 09 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மணித்தியாலங்களாக நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 13 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், வவுனியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் மட்டம் உயர்வதால், மல்வத்து ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் நான்கு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன என்றும் அங்கமுவ மற்றும் மஹாவிலச்சிய நீர்த்தேக்கங்கள் மற்றும் 20 குளங்கள் நிரம்பி வழிகின்றன என்றும்  திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் பி அபேசிறிவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .