Freelancer / 2026 மார்ச் 24 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில் இருந்து ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரினால் ஏற்பட்டுள்ள உற்பத்தி மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வுகளின் போது, ஒரு தரப்பினர் தமது ஒப்பந்தக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை கட்டார் எடுத்துள்ளது.
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள பெற்றோலிய நிறுவனங்களும் சமீபத்தில் இவ்வாறான நிலையை அறிவித்துள்ளன.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து உலகளாவிய எரிசக்தி சந்தைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
கட்டாரின் ரஸ் லஃப்பான் எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், நாட்டின் LNG ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கான விநியோகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஈரானிய தாக்குதல்களில் கட்டார் LNG நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் LNG உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைக் குறிவைத்துள்ளன.
உலகின் எண்ணெய் மற்றும் LNG விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago