2025 ஜூலை 05, சனிக்கிழமை

கட்டுத்துப்பாக்கிகளுடன் நபர்கள் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹல்ல – பல்லேகல பிரதேச சரணாலயத்தில் வனஜீவராசிகள் திணைக்கள  அதிகாரிகள் பயன்படுத்தும் வீதியிலிருந்து கட்டுத்துப்பாக்கிகளுடன் நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

கல்கிரியாகம வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகத் ​​​தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர்களிடமிருந்து  கட்டுத்துப்பாக்கிகள் 4 மற்றும் ரவைகள் என்பன மீட்கப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார் குறித்த நபர்கள் பலாகல – பமுணுகம பிரதேசத்​தைச் சேர்ந்தவர்களென்றும் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .