Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 30 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஐஸ் ரக போதைப்பொருளை கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவரை, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 200 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை, தமிழ்நாடு - நாமக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரென, விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த நபர், இந்தியா - சென்னை விமான நிலையத்தில் இருந்து எஸ்.ஜீ 001 எனும் இலக்கமுடைய விமானத்தில் அதிகாலை 1.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டுவந்ததாகக் ௯றப்படும் பொதி ஒன்றை பரிசோதனை செய்த போதே, திருமண வைபவங்களுக்காக விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த சாரிக்குள் இருந்து 200 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago