2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

கண்ணிவெடி அகற்றல் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

Janu   / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ' (Foundation for a World Without Mines – FWWM)  பிரதிநிதிகள் குழு, அண்மையில்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

இந்த பிரதிநிதிகள் குழுவில், முகாமைத்துவ இணை இயக்குநர் ஐரீன் ரோனர் மற்றும் அறக்கட்டளை நிர்வாக சபை உறுப்பினர் மைக்கேல் ப்ரௌமொல்லர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

வடக்கில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் DASH அமைப்பிற்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை' நிதியுதவி  அளித்து வருகின்றனர். எனவே  அதன் பணிகளை நேரில் ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்ட இவ்வமைப்பினர்   ஆனையிறவு குறிஞ்சாத்தீவு பகுதியில் தற்போது நடைபெற்று வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை  பார்வையிட்டனர். 

ஆனையிறு குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி பணிகள் மேற்படி கண்ணி வெடி அகற்றும் பணிகள் பெரிதும் உதயிருந்தமை இதன் போது   சுட்டிக்காட்டப்பட்டது

போர் காரணமாக சுமார் 800 ஏக்கர் வரையான நிலப்பரப்பு இப் பிரதேசத்தில்
கண்ணி வெடி அபாயம் உள்ள பகுதிகளாக காணப்பட்டது  என்றும் DASH அமைப்பினர் 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை' நிதியுதவியில் மேற்கொண்ட கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையால்  பாதுகாப்பாக பயன்படுத்த கூடிய அளவில் விடுவிக்கப்பட்டது என்றும்  தெரிவிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து, கனகராயன்குளம் பகுதியில் DASH குழுவினால் ஏற்கனவே கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடத்தை இப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை நேரில் கண்டு, அவர்கள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்தினர்.

'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை' போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான நிதி ஆதரவுடன், வடக்கு மாகாணத்தில் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு DASH அமைப்பு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் பொருளாதார வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பங்களிப்புச் செய்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டது

மேலும், இப் பிரதிநிதிகள் குழு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் (NMAC) சென்று, அதன் இயக்குநர்  என். எம். எம். நயுமுதீன் தலைமையிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .