2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்றின் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகப்பிரிவில் கல்வி கற்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை தேடியுள்ளனர். 
 
இதன்போது, மாணவியின் புத்தகப்பை, சைக்கிள் என்பன குறித்த தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அங்கிருந்த கிணற்றின் அருகே மாணவியின் பாதணி அவதானிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து, 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்ட போது, மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .